தமிழகத்தில் தொலைதூர கல்வி முறையில் விவசாயம் கல்வி கொண்டு வரப்படும் என இன்று ஆஸ்திரேலியாவில் நடந்த கல்வியாளர்கள் கூட்டத்தில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் இன்று (24.07.2024) மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
/indian-express-tamil/media/media_files/Vp4O0ShobVqXWoD0Gzi3.jpeg)
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அட்ரியன் விட்டில் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியார்களுடன் கலந்துரையாடினார். இவருடன் தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைசெயலாளர் அபூர்வா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/56QiF1QhZ6eJgRB0b8We.jpeg)
இந்தக் கலந்துரையாடலின் போது மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்கு, வேளாண்மையில் இயந்திர மயமாக்குதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள தொழில்நுட்பங்களை கண்டறிவது குறித்தும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப புதிய பயிர்கள் மற்றும் பயிர் ரகங்களை அறிமுகம் செய்தல், தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து இணையவழிக் கல்வி, மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவதும் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/JsOYs3WUDHQ9steCk6uj.jpg)
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“