மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி. இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில், வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியும் நிரம்பியுள்ளது.
அதன்பேரில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“