Advertisment

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகள் திருமணம்: கமல்ஹாசன்- வி.ஐ.பி-களுக்கு நேரில் அழைப்பு

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தனது இளைய மகள் திருமண விழாவுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி.களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
MRKP and Kamal Haasan

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகள் திருமணம்: கமல்ஹாசன்- வி.ஐ.பி-களுக்கு நேரில் அழைப்பு

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தனது இளைய மகள் திருமண விழாவுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி.களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

Advertisment

தி.மு.க-வின் கடலூர் மாவட்ட முக்கியத் தலைவராகவும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இவர் தனது இளைய மகள் திருமண நிகழ்வுக்காக கமல்ஹாசன், கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி-களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

MRKP and Kamal

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இப்போது அவருடைய இளைய மகள் கண்மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி திலகவதி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தம்பதியர் மகனுக்கு திருமண நிச்சயம் செய்துள்ளார். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் இளைய மகள் கண்மணி மருத்துவத்தில் எம்.டி. படித்திருக்கிறார். அதே போல, மாப்பிள்ளை சித்தார்த்தும் எம்.டி. டாக்டர். 

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் இளைய மகள் கண்மணி - சித்தார்த் திருமணம் அக்டோபர் 25-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகள் திருமணத்துக்கு வருபவர்களுக்கு விருந்து அளிக்க பிரபல சமையல் கலைஞர் மங்கைமடம் அகோரமூர்த்தி மற்றும் முட்டம் நளபாகம் குழுவினரிடம் சமையல் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

MRKP and Kamal

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது இளைய மகளின் திருமண நிகழ்வுக்கு அரசியல் துறையைச் சேர்ந்த அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல் வி.ஐ.பி.களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வருகிறார்.

அந்த வகையில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்து அழைத்தார். 

அதே போல, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை பாராட்டிய, நடிகர் கார்த்தி, அவருடைய சிவக்குமார் உள்ளிட்டோருக்கும் நேரில் சென்று தனது மகள் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். 

தனது மகளின் திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mrk Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment