scorecardresearch

விரைவில் அமைச்சர் ஆகிறார் உதயநிதி: அமைச்சர் மூர்த்தி உறுதி

தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகவுள்ளார் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

விரைவில் அமைச்சர் ஆகிறார் உதயநிதி: அமைச்சர் மூர்த்தி உறுதி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகவுள்ளார் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, “தி.மு.க., இளைஞரணி இனி வருகின்ற நாட்களில் பெரும் வரவேற்பை பெறவிருக்கிறது. கூடிய விரைவில் அவர் அமைச்சராக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, மேற்கொண்டு இன்னும் அவர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு இளைஞரணியை வலுப்படுத்த கூடிய பணிகளையும், மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளையும் பொறுப்புதான் செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது.

எப்படியெல்லாம் தி.மு.க., தலைவருக்கு உற்ற துணையாக நின்று தேர்தல் நேரங்களில் பணியாற்றினாரோ, அதைப்போல தமிழக அரசின் இனி வரக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் அவர் நிர்வகிக்கவிருக்கும் துறையின் சார்பில் வலுப்படுத்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.

இதனால் இளைஞரணியினுடைய செயல்பாடுகள், இளைஞரணியில் நபர்கள் சேரும் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister murthy confirmed udhayanithi to become minister soon

Best of Express