Advertisment

12-ம் தேதி கோவை பொதுக் கூட்டத்தில் 1.5 லட்சம் பேர் கலந்து கொள்வர்: அமைச்சர் முத்துச்சாமி

வருகிற 12-ம் தேதி கோவைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Muthus.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி  தி.மு.க வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க 12-ம் தேதி, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வருகை தர உள்ளனர். இதற்காக எல்.அன்.டி புறவழிச்சாலை செட்டிபாளையம் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Advertisment

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,  இந்தியா கூட்டணி அமைவதற்கு முக்கியமானவராக  இருந்த தலைவர்களில் ஒருவரான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்காக அனைத்து இடங்களுக்கும், ஒவ்வொரு நாடாளுமன்ற  தொகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

இதேபோல் கோவை நாடாளுமன்ற தொகுதி,  பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து எல்.என்டி பைபாஸ் சாலை, செட்டிபாளையம் அருகே, 150 ஏக்கர் பரப்பளவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு ஏறத்தாழ 1.50 லட்சம் பேருக்கு மேல் வர உள்ளனர். பல இடங்களில் குறிப்பிட்ட அளவு வருவார்கள் என்று கருதி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதிக அளவிலானோர்  வந்தனர். எனவே இப்பொழுது தலைவர் அவர்களும் வருகிறார், காங்கிரஸ் கட்சியினுடைய முன்னணி தலைவர் ராகுல் காந்தி அவர்களும் வருகை தர உள்ளார். எனவே மிகுந்த முன்னேற்பாடுகளோடு நாங்கள் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறோம். எனவே தான், வாகனம் நிறுத்துவதற்கான இடம்,  அடிப்படை வசதிகளுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. 

ஒன்னறை லட்சம் பேர் வர உள்ள நிலையில்,  வந்து செல்லக்கூடியவர்களுக்கு எந்த விதமான சிறு பிரச்சனைகளும் இல்லாமல் பாதுகாப்பாக பொதுமக்கள் வந்து செல்ல வேண்டும் என்ற ஏற்பாட்டையும் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.
குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட உள்ளது.  ங்கே கோவை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் , பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இந்த பிரச்சாரமானது நடைபெற உள்ளது. மாண்புமிகு தளபதி அவர்களும், ராகுல் காந்தி அவர்களும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல் தோழமைக் கட்சி தலைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

அமைச்சர்கள் டி ஆர் பி ராஜா,  சக்கரபாணி, மாவட்ட செயலாளர்கள் இணைந்து இதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றோம் என்றார்.இந்த நிகழ்வின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் விஜி.கோகுல், சாதிக், கனகராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment