தமிழக அரசின் விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவது அரசின் அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வரன்முறை திட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய நிலையில் அரசு தள்ளப்படுகிறது.

அரசின் கட்டட அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் நீண்ட காலமாக உள்ளதால், அதற்கு ஏற்ற விதிகளின்படி தீர்வை கொடுத்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்படுகிறதா என்பதை பொறியாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதம் விதிக்க அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil