தமிழ்நாடு அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிய நிலையில் வருமான இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வருமான இழப்பை ஈடுபட்ட டெட்ரா பாக்கெட்டுகளில் சாராய விநியோகம் மற்றும் மதுக் கடை திறப்பில் நேரம் மாற்றம் உள்ளிட்டவை நடைபெறலாம் என கூறப்பட்டது.
இதை உறுதி செய்யும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி, “குறைந்தப்பட்ச மதுப்பாட்டில் அளவு 180 மில்லியாக இருப்பதால் ஒருவர் இன்னொருவருக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இது மதுப்பாட்டிலின் குறைந்தப்பட்ச அளவை 180 மில்லியில் இருந்து 90 மில்லியாக குறைக்கும் யுக்தி என்றும் மதுக்கடைகள் நேரத்தை மாற்ற இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறப்பட்டது.
இது பலத்த சர்சையை ஏற்படுத்தியது. பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்தன. இந்த நிலையில், “மதுக்கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் இல்லை; டெட்ரா மது பாக்கெட் குறித்து முடிவெடுக்கவில்லை” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“