தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
பாஜக போராட்டம்:
நேற்று முன் தினம், காங்கிரஸ் கட்சிட்யை சேர்ந்த அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தென்னிந்தியர்களை குறித்து சர்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். விழாவில் அவர் பேசியதவது, “ தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் பாகிஸ்தானின் கலாச்சாரம் என்னுடன் நன்கு ஒத்துப்போகிறது.
தமிழ் நாட்டில் வாழ்வதை விட என்னால் பாகிஸ்தானில் வாழ்ந்து விட இயலும். எனக்கு அந்த மாநிலத்தின் மொழியும், உணவும் அவ்வளவு பரீட்சயம் இல்லை. இருந்தாலும் பாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும். அங்கு பஞ்சாபி மொழி பேசுவதில் எந்த தடங்கலும் இருக்காது” என்று கூறினார்.
தென்னிந்திய உணவுகள் தொடர்ச்சியாக தனக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு தற்போது மாபெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாஜக தரப்பில் பல்வேறு தலைவர்களும் சித்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்திய சித்துவின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை!
பாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.

பாஜக போராட்டம்
தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
பாஜக போராட்டம்:
நேற்று முன் தினம், காங்கிரஸ் கட்சிட்யை சேர்ந்த அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தென்னிந்தியர்களை குறித்து சர்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். விழாவில் அவர் பேசியதவது, “ தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் பாகிஸ்தானின் கலாச்சாரம் என்னுடன் நன்கு ஒத்துப்போகிறது.
தமிழ் நாட்டில் வாழ்வதை விட என்னால் பாகிஸ்தானில் வாழ்ந்து விட இயலும். எனக்கு அந்த மாநிலத்தின் மொழியும், உணவும் அவ்வளவு பரீட்சயம் இல்லை. இருந்தாலும் பாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும். அங்கு பஞ்சாபி மொழி பேசுவதில் எந்த தடங்கலும் இருக்காது” என்று கூறினார்.
தென்னிந்திய உணவுகள் தொடர்ச்சியாக தனக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு தற்போது மாபெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாஜக தரப்பில் பல்வேறு தலைவர்களும் சித்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்திய சித்துவின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.