/indian-express-tamil/media/media_files/2025/10/04/kn-nehru-2025-10-04-20-30-25.jpg)
திருச்சி சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் சித்தமருத்துவ கட்டிடத்திற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட சித்தமருத்துவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது;, ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருந்த சித்தமருத்துவமனை 30 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி கூறியது குறித்த கேள்விக்கு, அவர் வேறு என்ன சொல்ல முடியும், செய்ய முடியும், நேற்று முதலமைச்சர் கூறியதை கேட்டீர்களா? தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது, வெள்ளம் வந்தது அதற்குகூட பணம் வழங்கவில்லை, அப்போதுகூட வராத பாஜக எம்பிக்கள்குழு உடனடியாக இந்த நிகழ்வுக்கு வருவதற்கு காரணம் என்ன என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பாஜக கூட்டணியில் அதிமுகவும் இருப்பதால் அதுபோன்றுதான் பேசுவார், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள், நீதிமன்றத்தில் கூறியதுதான் உண்மை நிலைமை. கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது, விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை என பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூறுகிறது.
விஜய் கூட்டத்திற்கு அனுமதி வாங்கியவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றம் அக்கட்சி பற்றி கூறி இருக்கிற நிலையில் அவர்களை (விஜய்யை) பார்த்து நாங்கள் ஏன் பயப்படவேண்டும், பயந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எதுவந்தாலும் நாங்கள் சந்திப்போம் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.