திமுக அரசின் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறுதல் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மாதம் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிதி அமைச்சருடன் பேசி இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அந்த வகையில் நேற்று அன்பில் மகேஷ், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவருடன் கல்வித் துறை அதிகாரிகள் காகர்லா உஷா, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“