/indian-express-tamil/media/media_files/2025/06/10/jqms98x59j52geMnGCvQ.jpg)
வடலூர் வள்ளலார் நினைவிடம் சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.
வடலூர் வள்ளலார் நினைவிடம் சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் எல். முருகனிடம் சன்மார்க்க தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சன்மார்க்க தொண்டர்கள் மத்திய அமைச்சர் எல். முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில், வடலூர் வள்ளலார் நினைவிடம் சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.
தட்டாஞ்சாவடியில் உள்ள புதுச்சேரி மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், வடலூர் சத்திய ஞான சபையை சுற்றியுள்ள பெருவெளியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அதனை காக்க வலியுறுத்தியும், மற்றும் வடலூர் நகரத்தை மையமாகக் கொண்டு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு மாமிசம், மது மற்றும் போதை இல்லா புனித நகரமாக அறிவிக்க கோரியும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல். முருகனிடம் மத்திய அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பா.ஜ.க தலைவர் செல்வகணபதி, ராமலிங்கம் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.