scorecardresearch

கடவுள் முருகனை ஏன் இழுக்க வேண்டும்? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? நாராயணன் திருப்பதி

கடவுள் முருகனை ஏன் இழுக்க வேண்டும்; திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.

Minister Panneer Selvam inaugurated the agricultural products exhibition in Coimbatore
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர், “முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக திணையை சாப்பிட்டார்; இரண்டு அல்லது மூன்று திருமணம் செய்துக்கொண்டார்” என்றார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் மக்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் ஜோவியலாக பேசியதாக தெரிவித்தார்.
இதற்குப் பாஜகவின் நாராயணன் திருப்பதி, காட்டமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “”கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முருகன் இரண்டா அ‌ல்லது மூன்றா? ஆமாம் சாமி… இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் ” என்று கூறி விட்டு “ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்” எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

உவமான, உவமேயங்களுக்கு ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் க‌ட‌ந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா?

சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? தினை மாவை எங்கே வாங்கினார் என்பதையும் சேர்த்து சொல்லுங்களேன்” எனக் கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister panneer selvam inaugurated the agricultural products exhibition in coimbatore

Best of Express