scorecardresearch

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. ரூ.1000 பெற இது கட்டாயம்- அமைச்சர் பெரிய கருப்பன்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுமா அல்லது நேரடியாக வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் தெளிவுப்படுத்தினார்.

Minister Periya Karuppan said that bio-metric is mandatory to get Pongal prize of RS 1000
பொங்கல் பரிசு ரூ.1000 பெற பயோ மெட்ரிக் கட்டாயம் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வங்கிக் கணக்கில் வழங்கப்படுமா? அல்லது நேரடியாக கொடுக்கப்படுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், “இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வர இயலாதவர்கள் ”பவர்” கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கட்டாயம்” என்றார்.
இந்நிலையில், வரும் 9 ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜன.3) தொடங்கியது. இந்தப் பணி வருகிற 8ஆம் தேதிவரை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister periya karuppan said that bio metric is mandatory to get pongal prize of 1000