தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூர் பகுதியில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது, பாஜக மத அரசியலில் ஈடுபடுகிறது எனக் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “மதவெறியை ஏற்படுத்தி பாரதிய ஜனதா அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் இந்த அரசியலை மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். நம்மை பிரித்து சண்டையிட வைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, “அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாரதிய ஜனதா கட்சியினருக்கு என்ன தகுதி உள்ளது?” எனவும் கேள்வியெழுப்பினார்.
தமிழக பாஜக தலைவர் தி.மு.க அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“