சுதந்திர போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருக்கிறார். தமிழக வரலாற்றில் இதுபோன்று மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறும் ஆளுநர், சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்...?
அதனால் நாளை நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளேன்.
ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. நாள்தோறும் பொய் பேசுவதையே தனது தொழிலாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை சொல்வதை, செய்ய வேண்டியது தான் ஆளுநர் வேலை.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார்
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. வேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, நினைத்ததை செய்யுங்கள், இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“