அமலாக்கத்துறையின் 13 மணி நேர சோதனைக்குப் பிறகு விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். பொன்முடி வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: இ.டி. ரெய்டு: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு என்ன?
அமலாக்கத்துறையின் சோதனை பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் நடப்பதாக கூறப்பட்டது. பொன்முடி மகன் கௌதம சிகாமணி வெளிநாட்டில் செய்த முதலீடு தான் இந்த சோதனைக்கு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின்போது, சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 லட்ச ரூபாய் பணத்துடன், அமெரிக்க டாலர் உட்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் நகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil