தமிழ்நாடு மற்றும் தெலுங்கான ஆளுநர்கள் அரசியல் பேசுகிறார்கள் என்றும், அவர்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார்கள் என்று அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசுகையில் “ நமக்கு ஒருவர் ஆளுநராக வந்துள்ளார். அவர் அப்படியே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வருகிறார். இதுவரை யாரேனும் ஆளுநர் அரசியல் பேசி பார்த்தது உண்டா? இரண்டு ஆளுநர்கள் மட்டுமே அரசியல் பேசுகிறார்கள்.
ஒன்று தமிழக ஆளுநர். மற்றொன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இவருக்கு என்ன ஆசை தெரியுமா? இதை தமிழிசையே என்னிடம் சொன்னார்கள். கன்னியாகுமரியில் எம்.பி-யாக போட்டியிட்டு, மத்தியில் அமைச்சராக வேண்டும் என்று ஆசை என்று என்னிடம் கூறினார். அவர்கள் பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் திமுக அப்படியில்லை, உணர்வோடும், இன உணர்வோடு, சமத்துவ உணர்வோடு,சமூக நீதி கொள்கையுடன் போராட்டிக்கொண்டிருக்கிறோம். திமுக-வின் அடிமட்ட தொண்டனில் இருந்து இதை குறிக்கோளாக வைத்துதான் செயல்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“