/indian-express-tamil/media/media_files/2025/10/17/ptr-periyar-bus-2025-10-17-22-51-48.jpg)
பெரியார் பயன்படுத்திய பிரசார பேருந்திற்குள் சென்று பார்த்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் , மற்றும் ஜிடி நாயுடுவின் பேரன் ராஜ்குமார் ஆகியோர் சிறிது நேரம் பேருந்துக்குள் அமர்ந்திருந்தனர்.
கோவையில் ஜி.டி அருங்காட்சியகத்தில் பிரத்தியேகமாக திறக்கப்பட்டுள்ள அதிநவீன கார்கள் அடங்கிய பிரிவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக, பழங்கால கார்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள காட்சியகத்திற்கு சென்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். அப்போது, பெரியார் பயன்படுத்திய பேருந்து இன்றளவும் பராமரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை கண்டு ரசித்தார்.
பேருந்திற்குள் சென்று பார்த்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் , மற்றும் ஜிடி நாயுடுவின் பேரன் ராஜ்குமார் ஆகியோர் சிறிது நேரம் பேருந்துக்குள் அமர்ந்திருந்தனர்.
இந்த பேருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பேருந்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்து பேருந்து குள்ளேயே இருக்கைகள் படுக்கையறை அலமாரி சமையலறை தங்கும் வரை என அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. மறைந்த நடிகரும் நாடக கலைஞர் நடிகவேள் MR ராதா இந்த பேருந்தை பெரியாருக்கு பரிசளித்தார்.
இந்த பேருந்தை தனது நெருங்கிய நண்பரான ஜிடி நாயுடுவுக்கு பெரியார் பரிசளித்திருந்தார். இன்றளவும் அந்தப் பேருந்து அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.