பொங்கல் பண்டிகையொட்டி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் காளையை மாடுபிடி வீரர்கள் பிடித்த போதும் அது பிடிமாடு இல்லை என்று ஜல்லிக்கட்டு வர்ணணையாளர்கள் அறிவித்ததால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ம் தேதி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், சாமாணியர்களின் காளை முதல் அமைச்சர்களின் காளை பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீரி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து அணைந்து மாடுகளைப் பிடித்தனர்.
அந்த வகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காளையும் கலந்துகொண்டது. இது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மாடு என்ற அறிவிப்போடு வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையை 2 மாடுபிடி வீரர்கள் பாய்ந்து பிடித்தபோதும் பிடிமாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு பிறகும் மாடுபிடி ஒருவர் அமைச்சரின் காளையைப் பிடித்த பிறகும், பிடிமாடு என்று அறிவிக்கப்படாதால், திமுக எதிர்ப்பாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் அமைச்சர் பி.டி.ஆர் காளையை எத்தனை முறை பிடித்தாலும் பிடிமாடு ஆகாது என்று ஜல்லிக்கட்டு போட்டி வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி விமர்சித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், வாடிவாசலில் இருந்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காளை வெளியே வந்ததும் 2 மாடுபிடி வீரர்கள் பாய்ந்து காளையைப் பிடித்தனர். ஜல்லிகட்டு போட்டி வர்ணணையாளர் ஏ… எப்பா இது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மாடுப்பா என்று கூறுகிறார். காளையை ஒருவர்தான் பிடிக்க வேண்டும் 2 பேர் பிடிக்க கூடாது என்று ஜல்லிக்கட்டு போட்டி வர்ணணையாளர் ஒரு ஆள் பிடி என்று கூறுகிறார். அறிவித்தார். அவர்கள் மாட்டை விட்டதும் மாடு களத்தில் சுற்றி விளையாடியது. ஆனாலும், இறுதியில் மாடுபிடி வீரர் ஒருவர் அமைச்சரின் காளையைப் பிடித்தார். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி வர்ணணையாளர் பிடிமாடு என்று அறிவிக்காமல் “ஏ… எப்பா… இது அமைச்சர் பி.டி.ஆர் மாடுப்பா” என்று கூறிவிட்டு மாட்டு உரிமையாளர் வந்து மாடு பிடித்து செல்லும்படி அறிவிக்கிறார்.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்களால் பிடிக்கப்பட்டபோதும், பிடிமாடு என்று அறிவிக்கப்படாததால், நெட்டிசன்கள் சிலர், அமைச்சரின் மாடு பிடிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி வீடியோவை பகிர்ந்து, “நீ எத்தனை தடவை மாட்ட பிடித்தாலும் பிடிமாடு கெடையாது.ஏன்னா அது திமுக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மாடாக்கும்.” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.
அதே போல, மற்றொரு நெட்டிசன், “நீங்க அந்த மாட்டை எத்தன வாட்டி புடிச்சாலூம் மாடு பிடிமாடுனு ஏற்க முடியாது. ஏன்னா அது திமுக அமைச்சர் பி.டி.ஆர் மாடு.
மாடுக்குதான் நாங்க பரிசு கொடுப்போம்… இந்தா தைரியமா ஒருத்தன் புடிச்சு சிட்டான்… மாடா ஆடா இது… வளைகாப்புக்கு போய் வளையல் தான் போடனும்…” என்று கிண்டலுடன் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், “மாடு அலங்காநல்லூரில் மாட்டிகிச்சு… இது பிடிஆர்.மாடு பிடி மாடா ஆனது…” என்று பதிவிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காளை மாடுபிடி வீரர்களால் பிடிக்கப்பட்டால், பிடிமாடாகா ஆகாதா, அமைச்சரின் மாட்டைப் பிடித்தால் பரிசு கிடயாதா என்று கேள்வி எழுப்பி, இது அலங்காநல்லூர் காமெடி என்று விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.