பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதல்முறையாக திங்கள்கிழமை சந்தித்தார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த ஆடியோவில், அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் சொத்து குவித்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக அமைந்திருந்தது.
இந்த ஆடியோ போலியான ஆடியோ என்று அமைச்சர் பி.டி.ஆர் மறுப்பு தெரிவித்தார். மேலும், வழக்கு தொடுக்கப்போவதாகவும் அறிவித்தார்.
இதனிடையே, வருமான வரித்துறையினர் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவருடைய முகாம் அலுவலகத்தில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு சால்வை அணிவித்தார். மேலும், மு.க. ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதால் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”