பொங்கலுக்கு 16768 சிறப்பு பஸ்கள்: சென்னையில் பஸ்கள் கிளம்பும் 5 இடங்கள் இவைதான்!

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11, 12, 13, ஆகிய 3 நாட்களுக்கு மொத்தம் 16,788 சிறப்பு பேருந்துகள் இயக்குகிறோம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

Transport Minister Raja Kannappan, special buses for pongal festiva, pongal festival 2022, pongal festival special buses, பொங்கல் பண்டிகை, அமைச்சர் ராஜ கண்ணப்பன், சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 16768 பேருந்துகள் இயக்கம், சென்னையில் இருந்து 5 இடங்களில் பேருந்துகள் புறப்படும், temporary bus stand in chennai, 5 bus stand in chennai for Pongal festival, pongal, chenani special buses, tamilnadu pongal festival

பொங்கல் பண்டிகையையொட்டி 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்பதை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திங்கள் கிழமை கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இன்றைக்கு நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் போக்குவரத்துத் துறை செயலாளர், போக்குவரத்துத் துறை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11, 12, 13, ஆகிய 3 நாட்களுக்கு 16,788 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து 5 இடங்களில் புறப்படும் தாம்பரத்தில் இருந்து மட்டும் 2 இடம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையத்தின் அருகில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் 2 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். அதன்படி, 1, மாதவரம், 2. கே.கே. நகர், 3. தாம்பரம் பேருந்து நிலையம், 4. தாம்பரம் ரயில் நிலையம் அருகே அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், 5. பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட 6 மொத்தம் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11, 12, 13, ஆகிய 3 நாட்களுக்கு மொத்தம் 16,788 சிறப்பு பேருந்துகள் இயக்குகிறோம்.

ஜனவரி 11ம் தேதி முதல் சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

ஜனவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். ஜனவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பிற ஊர்களில் 6,468 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்து இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தொடர்ந்து போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கினாலும் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. நெடுஞ்சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் டெண்டர் ரத்து செய்யப்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்டு அறிந்து கொள்ளவும் புகார் அளிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை பொதுமக்கள் 24 மணிநேரமும் உதவிக்கு அழைக்கலாம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister raja kannappan announced special buses and bus stands in chennai for pongal festival

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com