scorecardresearch

ராஜ கண்ணப்பன் இலாகா அதிரடி மாற்றம்: போக்குவரத்து அமைச்சராக சிவசங்கர் நியமனம்

அமைச்சர் ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசியதாக எழுந்த புகார் சர்ச்சையான நிலையில், தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தமிழக அரசில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் பதவி வகித்து வந்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சிவசங்கர் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயர் சொல்லி ஒருமையில் பேசியதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது புகார் எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டு அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister rajakannappan shifted to bc welfare department after castiest allegation

Best of Express