Advertisment

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு; வழக்கறிஞர்கள் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டு கொள்ளப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Rajenthra Bhalaji, K.T.Rajendra Balaji, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சொத்துக் குவிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், disproportionate assets case, Madras High court, aiadmk minister

Minister Rajenthra Bhalaji, K.T.Rajendra Balaji, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சொத்துக் குவிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், disproportionate assets case, Madras High court, aiadmk minister

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டு கொள்ளப்பட்டது.

Advertisment

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தன் மனுவில், ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 35 ஏக்கர் நிலமும், அதே போல திருத்தங்கல் பகுதியில் 2 வீட்டுமனைகள், 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் அசல் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என கணக்கிடப்படும் நிலையில், தான் அந்த நிலங்களை வெறும் 1 கோடியே 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ராஜேந்திர பாலாஜி கணக்கு காட்டியுள்ளதாகவும், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாரயணன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி தலைமையில் திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக ராஜேந்திர பாலாஜி 1996 பதிவில் இருந்தது முதல்

விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமனியம், அமைச்சர் தொடர்பான புகார்கள் குறித்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அமைச்சர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தள்ளதை ஏற்று, இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, ஆரம்பகட்ட விசாரணையை எவ்வளவு நாட்கள் மேற்கொள்ளலாம், யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்பது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்குமாறு, ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞருக்கும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Aiadmk Madras High Court Minister K T Rajendra Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment