தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகளை கவுரவிக்கும் வகையில், அவரது பேனா வடிவிலான நினைவு சின்னத்தை சென்னை மெரினா கடற்கரையில் நிறுவ அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த நினைவுச் சின்னம் நிறுவுவதற்காக, பொதுமக்கள் இடையே கருத்துக்கணிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பேனா நினைவுச் சின்னத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு திட்டத்திற்கு நிதி இல்லை என்று கூறி, இதுபோன்ற பணிகளுக்கு செலவிடுவது பற்றி பேசினார். எதிர்ப்புகளை மீறி, நினைவு சின்னம் கட்டப்பட்டால் அதை உடைப்போம் என்று தெரிவித்தார்.
அதற்கு அமைச்சர் சேகர் பாபு, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கூறியிருந்தார்; அவர் கூறியதாவது, "அவர் சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூ பறித்துக்கொண்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும் தான் இருக்கா, எல்லாருக்கும் இருக்கிறது", என்று தெரிவித்துள்ளார்.