தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் இன்றி அமையாத ஒன்றாக மாறி வரும் நிலையில், அரசு இனி வரும் காலங்களில் தமிழகத்தில் பத்து பேருந்து நிலையங்களை கொண்டுவரும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை கிட்டியுள்ளது. தற்போது சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இது பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இறுதி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு சென்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் சா.மு.நாசர் இன்று காலை கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடிய பேருந்துகளின் வசதிக்காக, 24.8 ஏக்கரில் ₹336 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது சென்னையின் நான்காவது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil