Advertisment

ராமேஸ்வரம் டு காசி; 200 பேருக்கு அரசு செலவில் ஆன்மீக பயணம்: சேகர்பாபு அறிவிப்பு

காசியாத்திரை என்பது வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலும் புனித யாத்திரையாக இந்து மக்கள் கருதுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமேஸ்வரம் டு காசி; 200 பேருக்கு அரசு செலவில் ஆன்மீக பயணம்: சேகர்பாபு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 20 மண்டலங்களிலிருந்து 200 நபர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு கோயில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

காசியாத்திரை என்பது வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலும் புனித யாத்திரையாக இந்து மக்கள் கருதுகின்றனர்.

publive-image

காசியாத்திரை செல்ல நினைக்கும் மக்கள், காசிக்கு மட்டும் செல்வதால் தங்களது யாத்திரை நிறைவுக்கு வராது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம் ஆகும்.

2022-2023 ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், 'இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு 200 நபர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலத்திற்கு 10 நபர்கள் என்று 200 நபர்களை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராக, இறை நம்பிக்கை உடையவராக, 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை இணை ஆணையர் அலுவலகத்திற்கு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர் என்று அறிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rameshwaram Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment