Minister Sekar Babu Daughter seeks police protection in Bengaluru: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய விசுவாசியுமான பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியுள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் திங்கள்கிழமை தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகினார். அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் ஒரு மனு கொடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மகள் ஜெயகல்யாணி, தான் சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
"சதீஷ்குமார் மீதான எனது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரை திருமணம் செய்ய முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்து இரண்டு மாதங்கள் காவலில் வைத்திருந்தனர்," என்று அவர் கூறினார்.
"இதற்கு பின்னால் என் தந்தையின் பங்கு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நான் 18 வயதுக்கு மேல் உள்ள பெண். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்" என்று ஜெயகல்யாணி கூறினார்.
மேலும், தமிழகம் திரும்பினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்
இந்து ஆர்வலர் பரத் ஷெட்டி கூறுகையில், தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள உதவி கோரி சமூக ஊடகங்களில் தங்களை அணுகினர் என்றார்.
மேலும், "நாங்கள் இந்து பாரம்பரியத்தின்படி திருமண விழாவை ஏற்பாடு செய்தோம். பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து அவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனவே அவர்கள் பெங்களூரு காவல்துறையிடம் பாதுகாப்பு கோருகிறோம்," என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil