சென்னை, பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் குத்தம்பாக்கம் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டு 2021-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.
அண்மையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட நிலையில் மேற்கு மாவட்ட மக்கள் மற்றும் குறிப்பாக கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு செல்ல இந்த பேருந்து முனையம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் பெங்களூர் செல்லும் மக்கள், ஐடி ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பேருந்து முனையம்
புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் வகையில் கட்டப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 13) குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“