scorecardresearch

நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டது ஏன்? சேகர்பாபு விளக்கம்

“நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது” – அமைச்சர் சேகர் பாபு

sekar babu

நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி தொடர்ந்து பேசுகையில், “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில், சட்டமன்ற அறிவிப்பில், 34 திட்டங்கள் 26 சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை அறிவித்திருந்தோம்.

அந்த 34 இடங்களிலும், நேரடியாக களஆய்வுக்கு சென்று அமைக்கப்படவிருக்கின்ற விளையாட்டு மைதானம், பூங்கா, பேருந்து நிலையம் போன்ற திட்டங்களை மேற்கொள்ளவேண்டியதை, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களோடு துறையினுடைய செயலாளர் அந்தந்த மாவட்டத்தினுடைய ஆட்சியர்களுடன் சென்று களஆய்வினை மேற்கொண்டு வருகின்றோம்.

தமிழக முதலமைச்சரை பொறுத்தவரையில், தலைவர் கலைஞரின் காலத்தில் இருந்து, ஒன்றிய அரசை பொறுத்தவரையில் ‘உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல்கொடுப்போம்’, என்கின்ற தாரக மந்திரத்தோடு தான் இயங்கி வருகின்றோம்.

அண்மையில் ஆளுனருடன் ஏற்பட்ட சர்ச்சையின்போது கூட, தமிழக முதல்வர் தெளிவாக விளக்கி கூறினார்.

“ஆளுநர் நண்பர் என்று சொன்னாலும், நட்புக்காக கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்”, என்று கூறினார்.

அந்த வகையில், டெல்லியில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், திமுக ஜனாதிபதியை வைத்துதான் அந்த கட்டிடத்தை திறக்கவேண்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்”, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister sekar babu press meet about inauguration of new parliamentary building