கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணியைப் பற்றி அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: "புதிதாக அமையவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைந்து முடித்திடவும், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கும், தமிழக முதல்வருடைய உத்தரவிற்கேற்ப, நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இரண்டாவது முறையாக மாவட்டத்தின் அமைச்சர் தாமு அன்பரசன், துறையின் செயலாளர் அபூர்வா, துறையின் உறுப்பினர் செயலாளர் அன்சுல், துறையின் சட்டப்பேரவை உறுப்பினர் வரலக்ஷ்மி ஆகியோருடன் இணைந்து, இரண்டாவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை குறித்து விரிவான ஆலோசனை நடத்தினோம்.
தொடர்ந்து மாதத்திற்கு ஆறுமுறை இது சம்மந்தமான ஆய்வு கூட்டங்களை, துறையினுடைய செயலாளர் முழு வேகத்துடன் நடத்தி வருகிறார்.
எங்கெல்லாம் பணிகள் தொய்விருக்கின்றதோ அவற்றையெல்லாம் விரைவு படுத்துவதற்கும், அதற்கு உண்டான தேவைகளை நிறைவேற்றி தருவதற்கும், முழுவீச்சில் உத்தரவு பிறப்பித்து, பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வெகுவிரைவில் இந்த பேருந்து நிலையத்தை, மக்களுடைய பயன்பாட்டிற்கு அர்பணிப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழக முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டுசென்று பணிகளை நிறைவுற்றவுடன், அவரையே திறப்பு விழாவிற்கு அழைக்கவேண்டும் என்று மாவட்ட துறை அமைச்சர் தாமு அன்பரசன், துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் கேட்டுக்கொள்கிறோம்.
வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil