தமிழ்நாடு கோவில்களில் சிறப்பு தரிசனம் பெறுவதற்கு அளிக்கப்படும் டிக்கெட்டுகளில் முறைகேடு நடப்பதாக சர்ச்சை கிளம்பியது. கோயிலில் தரிசனம் பெற வரும் மக்களிடம் கூடுதல் பணம் பெற்று வழிபாடு செய்ய அனுமதிப்பதாக சர்ச்சை கிளம்பியது.
இதோடு, சிறப்பு தரிசனம் பெரும் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்களும் எழுந்துள்ளது.
கோவில் ஊழியர்கள் அதிக பணம் வாங்கி சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கிறார்கள் என்கிற புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இதுபோன்ற செயல்களை ஊழியர்கள் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் முறை கைவிடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
கடவுளிடம் பிராத்தனை செய்யும் இடத்தில் அனைவரும் சமம் என்கிற நம்பிக்கையை நிலைநிறுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அறநிலையத்துறை கூறியது.
இந்த நிலையில் வடபழனி கோவிலில் தரிசன டிக்கெட் வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுப்பப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று போது சாதாரண தரிசன டிக்கெட்டை எடுத்துள்ளார்.
அங்கு அவர் தரிசனம் டிக்கெட் வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதை கண்டு புகார் அளித்ததால், 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார். தரிசன டிக்கெட் வழங்கும் ஊழியர்களான ரேவதி மற்றும் தரிசன டிக்கெட்டை சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil