முடிச்சூரில் ஆம்னிபஸ்களை நிறுத்துவதற்கான இடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆம்னி பஸ் நிலையம் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆம்னி பஸ் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
வண்டலூர் அருகே முடிச்சூரில் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்காக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கான இடத்தின் கட்டுமானப் பணிகளை இந்து அறநிலையத்துறை மற்றும் சி.எம்.டி.எ துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். முடிச்சூரில் இந்த ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்காக 5 ஏக்கர்பரப்பளவில் ரூ. 42.70 கோடியில் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும், முடிச்ச்சூர் ஆம்னி பஸ் நிலையத்தில், ஒரே நேரத்தில், 111 ஆம்னி பஸ்களை நிறுத்த முடியும் என்று கூறினார்.
மேலும், ஆம்னிபஸ் ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் வசதிக்காக, குளியலறை மற்றும் கேன்டீன் வசதியுடன் கூடிய இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
“முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குப் புறப்படும்” என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த ஆம்னி பஸ் நிலையத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச், 2025-க்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதோடு, “சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஏற்கனவே ரயில்வேக்கு நிதி வழங்கியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“