/tamil-ie/media/media_files/uploads/2020/06/cats-8.jpg)
Minister Sellur K Raju compares coronavirus with actor vadivelu's character in Tamil Movie
Minister Sellur K Raju compares coronavirus with actor vadivelu's character in Tamil Movie : மதுரையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ” திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை பத்து, பதினைந்து நாய்கள் சுற்றி வளைத்து கடிக்க துவங்கும். வடிவேலுவோ கடிக்காதீங்க, கடிக்காதீங்க என்று சொல்வார்.
ஆனால் நாய்கள் அவரை விடாமல் கடித்து குதற துவங்கும். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே அங்கிருக்கும் நாய்கள் அனைத்தும் செத்து மடிந்துவிடும். அப்போது நாய்களை பார்த்து வடிவேலு கேட்பார், அப்போதே நான் சொன்னேன் கேட்டீர்களா? என்று.
மேலும் படிக்க : அரசு அலுவலகம் வந்த நபர் மரணம் ; குப்பை வண்டியில் உடலை அகற்றிய கொடூரம்
அப்படி தான் இந்த கொரோனாவும் நம்மை கண்டு பயந்து ஓடும். நிச்சயமாக நாம் கொரோனாவை வெல்வோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் மதுரையில் கொரோனா நோய்கள் அதிகரித்து வருவது மேலும் கவலை அளிக்கிறது என்று கூறிய அவர் இங்கு உள்ள்ள ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் தெய்வத்திற்கு இணையாக மருத்துவர்களை வணங்குங்கள் என்றும் அவர் அந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.