Minister Sellur Raju inspected ration shop and suspended a person on the spot : கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பலரும் வேலைக்கு செல்லாத நிலை உருவானதை தொடர்ந்து பலரும் தங்களின் உணவிற்கு ரேசன் கடைகளை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டது.
Advertisment
மதுரை பெத்தனியாபுரத்தில் பொதுமக்களுக்கு அரசு சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அமைச்சரிடம் கார்த்திகை செல்வி என்ற பெண், “ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசி எடை குறைவாகவும், கல்லும் புழுக்களும் நிறைந்ததாகவும் உள்ளது. இதை பற்றி கடைக்காரரிடம் கேட்டால் அவர் திட்டுகிறார்” என்று கூறியுள்ளார்.
காரில் இருந்து இறங்கிய அவர், கட்சிக்காரரின் டூவிலரில் சென்று ரேசன்கடையில் ஆய்வு நடத்தினார். பாண்டியராஜபுரத்தில் அமைந்திருக்கும் ரேசன் கடைக்கு சென்ற அவர், கார்த்திகை செல்வியையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு விசாரணை நடத்திய அமைச்சர், ரேசன் பொருட்களின் தரத்தினை சோதனை செய்தார். மேலும் அவருடைய கேள்விக்கு ரேசன் கடை பணியாளரின் பதில் ஏற்பு மிக்கதாய் இல்லாததால் அவரை உடனே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் செல்லூர் ராஜூ. மேலும் கடைக்கு சம்பந்தமில்லாத நபர் கடைக்குள் இருந்த்தால் அவர் கைது செய்யப்பட்டார். செல்லூர் ராஜூவின் இந்த நடவடிக்கை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுத் தந்துள்ளது.