காரை நிறுத்தி புகார்; ரேசன் கடையை சோதனையிட்டு ஊழியரை உடனே சஸ்பெண்ட் செய்த செல்லூர் ராஜூ

மேலும் கடைக்கு சம்பந்தமில்லாத நபர் கடைக்குள் இருந்த்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கடைக்கு சம்பந்தமில்லாத நபர் கடைக்குள் இருந்த்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Sellur Raju inspected ration shop and suspended a person on the spot

Minister Sellur Raju inspected ration shop and suspended a person on the spot

Minister Sellur Raju inspected ration shop and suspended a person on the spot : கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பலரும் வேலைக்கு செல்லாத நிலை உருவானதை தொடர்ந்து பலரும் தங்களின் உணவிற்கு ரேசன் கடைகளை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டது.

Advertisment

மதுரை பெத்தனியாபுரத்தில் பொதுமக்களுக்கு அரசு சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அமைச்சரிடம் கார்த்திகை செல்வி என்ற பெண், “ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசி எடை குறைவாகவும், கல்லும் புழுக்களும் நிறைந்ததாகவும் உள்ளது. இதை பற்றி கடைக்காரரிடம் கேட்டால் அவர் திட்டுகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க :மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

Advertisment
Advertisements

காரில் இருந்து இறங்கிய அவர், கட்சிக்காரரின் டூவிலரில் சென்று ரேசன்கடையில் ஆய்வு நடத்தினார். பாண்டியராஜபுரத்தில் அமைந்திருக்கும் ரேசன் கடைக்கு சென்ற அவர், கார்த்திகை செல்வியையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு விசாரணை நடத்திய அமைச்சர், ரேசன் பொருட்களின் தரத்தினை சோதனை செய்தார். மேலும் அவருடைய கேள்விக்கு ரேசன் கடை பணியாளரின் பதில் ஏற்பு மிக்கதாய் இல்லாததால் அவரை உடனே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் செல்லூர் ராஜூ. மேலும் கடைக்கு சம்பந்தமில்லாத நபர் கடைக்குள் இருந்த்தால் அவர் கைது செய்யப்பட்டார். செல்லூர் ராஜூவின் இந்த நடவடிக்கை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுத் தந்துள்ளது.

மேலும் படிக்க : கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் துவங்கியது பருவமழை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: