5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு; 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன்

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து […]

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், “5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தேர்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் தேர்வு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், “5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.


பொதுத்தேர்வு குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்று செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார்.

Web Title: Minister sengottaiyan about 5th 8th public exam

Next Story
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்Tamil Nadu local body election, உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு தீவிரம், local body election 2019, chennai corporation mayor, vellore city mayor, DMK, AIADMK, PMK, DMDK, உள்ளாட்சித் தேர்தல் 2019, உள்ளாட்சித் தேர்தல், தமிழக உள்ளாட்சித் தேர்தல், அதிமுக, திமுக, ops, eps, பாமக, தேமுதிக, பாஜக, புதிய நீதிக்கட்சி,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express