scorecardresearch

தெரியாமல் கை பட்டு விமானத்தில் எமர்ஜென்சி கதவு திறக்குமா? அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

கடந்த டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

தெரியாமல் கை பட்டு விமானத்தில் எமர்ஜென்சி கதவு திறக்குமா? அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில், அதனுடைய எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் வெளியிடப்படாத நிலையில், இதில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

அண்ணாமலையும் தேஜஸ்வியுடன் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டதால், கடந்த டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இந்த விவகாரத்திற்கு தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படியும் விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு பின்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் நாங்கள் பயணம் செய்தோம். தேஜஸ்வி சூர்யாவும் நானும் அந்த விமானத்தில் முன்னாடி இருக்கும் 4 சீட் ஒன்றாக இருக்கும் சீட்டில் இருந்தார். 10 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகத்தான் சென்றது. அவரை பார்க்க அடுத்தடுத்து பலர் வந்தனர்.

இதனால் தேஜஸ்வி சூர்யா எழுந்து எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது தேஜஸ்வி சூர்யா எமர்ஜன்சி கதவு திறந்து இருப்பதுப் பற்றி சொன்னவுடன் அதை புகார் அளித்தோம். பைலட் வந்து விசாரித்தார். தேஜஸ்வி அதற்கு, நான் ஜன்னலை அட்ஜஸ்ட் செய்தேன். அப்போது தவறுதலாக கைபட்டுவிட்டதற்கு ஏப்படி விமானத்தின் அவசர கதவு திறக்கும் என்று வினவினார்”, என்று கூறினார்.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, “இந்த விமான விவகாரத்தில், ஒரு கட்சியின் தலைவராக இருக்க கூடியாவர் எப்படி பொய்யான செய்தியை வெளியிடுகிறார் என்று பார்க்க வேண்டும். அவர் போலீஸ் அதிகாரியாக கர்நாடகாவில் இருந்த போது அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நினைவில் இருக்கலாம். உங்களிடம் அந்த வீடியோக்கள் இல்லை என்றாலும் நான் அனுப்புகிறேன்.

விமானத்தில் அவர்கள் எதோ கை வைத்தனர். அது மட்டும்தான் அங்கு நடந்தது. அவசரகால கதவை அவர்கள் திறக்கவில்லை. விபத்தாக திறந்துவிட்டது என்று கூறி உள்ளார். வெறுமனே கை வைத்ததும் இவரின் கதவு எப்படி திறந்தது. அரைமணி நேரம்தான் விமானம் தாமதமாக சென்றது என்று பச்சை பொய்யை வேறு சொல்கிறார்.

கதவு திறக்கப்பட்டது உண்மை, மன்னிப்பு எழுதிக்கொடுத்தது உண்மை என்று விமான போக்குவரத்துறை அமைச்சரே சொல்லிவிட்டார். ஆனால் இப்போது ஏன் அவர் இதெல்லாம் விபத்து என்பது போல பொய் சொல்ல வேண்டும். தவறு செய்திருந்தால் தவறு என்று சொல்ல வேண்டியது தானே?”, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister senthil balaji about annamalai flight issue