scorecardresearch

பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக் கடை இருந்தால் 2 நாளில் நடவடிக்கை: செந்தில் பாலாஜி உறுதி

இதுவரை 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக் கடை இருந்தால் 2 நாளில் நடவடிக்கை: செந்தில் பாலாஜி உறுதி
அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் இருந்தால் அவை இடமாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இதைப்பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் கூறுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கோயில்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருந்த மதுபான கடைகள் மூடப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது”, என்று கூறினார்.

இதுவரை 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

மேலும், “மீண்டும் தமிழகத்தில் கோயில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தால், மக்கள் புகார் அளிக்கலாம். புகார் தெரிவித்த இரண்டு நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகள் இடமாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister senthil balaji about tasmac near schools and colleges tn assembly

Best of Express