Advertisment

தங்கம் தென்னரசுக்கு மின்சாரம், முத்துசாமிக்கு மதுவிலக்கு கூடுதலாக ஒதுக்கீடு

அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான கோப்புகள் தலைமை செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu

Minister Muthusamy and Thangam Thennarasu

செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை வீட்டு வசதி துறை அமைச்சராக உள்ள முத்துசாமிக்கு ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Advertisment

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஆஞ்சியோ கிராம் செய்ததில் செந்தில் பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த நீதிபதி அல்லி, அவருக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவருக்கு புழல் சிறைத் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். இந்நிலையில், செந்தில் பாலாஜியிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அதன்படி செந்தில் பாலாஜி வசம் உள்ள இரண்டு துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக உள்ள முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்.

அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான கோப்புகள் தலைமை செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment