அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தது சற்று கடினமான அறுவை சிகிச்சையாகத் தான் இருந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (புதன்கிழமை) அதிகாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இப்போது முடிந்துள்ளது என்பதால் மாலை தான் சுய நினைவுக்கு வருவார்.
3 அடைப்புகள் இருந்துள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த அறுவை சிகிச்சை சற்று கடினமாகத் தான் இருந்துள்ளது. தலைசிறந்த இதய மருத்துவர் தலைமையில் சிகிச்சை நடந்துள்ளது. தற்போதைய நிலையில், நான் அவரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அமைச்சர் மா.சு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil