Advertisment

இலவச மின்சாரம் பற்றி அச்சமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதார் அட்டையை இணைத்த பிறகும் வாடிக்கையாளர்கள் 100 இலவச யூனிட்களைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
இலவச மின்சாரம் பற்றி அச்சமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அந்த அச்சத்தைப் போக்க தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

இது ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சாரம் என்றும், ஆதார் அட்டையை இணைத்த பிறகும் வாடிக்கையாளர்கள் 100 இலவச யூனிட்களைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

publive-image

நுகர்வோர் மத்தியில் அச்சத்தை உருவாக்கி அதை சாதகமாக்கிக் கொள்ளும் கந்து வட்டிக்காரர்களின் கைவேலை என்று கூறினார்.

நுகர்வோர், விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கம் போல் மின்சாரம் கிடைக்கும் என்றும் இவை நடப்பதற்காக TANGECO உற்பத்தியை அதிகரிப்பதாக தெளிவுபடுத்தினார்.

"TANGEDO இன் நுகர்வோர் எண்ணிக்கை 1.15 கோடியில் இருந்து தற்போது 3 கோடியாக அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நுகர்வோருக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உறுதியளித்தபடி ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் வாக்குறுதியளிக்கப்பட்ட 50,000 இணைப்புகளில் 20,000 இணைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வெளியிட்டு உள்ளார், மீதமுள்ள 30,000 இணைப்புகள் 100 நாட்களில் வழங்கப்படும்", என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu V Senthil Balaji Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment