/tamil-ie/media/media_files/uploads/2021/12/senthil-balaji-4.jpg)
வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவையில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என தீவிரமாக வேலை செய்துவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் ஸ்கோர் செய்து வருகிறார். கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், விவசாய செயல்பாட்டாளரான 103 வயது மூதாட்டி பாப்பம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த திமுகவினரும் நெட்டிசன்களும் அமைச்சர் செந்தில் பாலாஜி செம்மையாக கவர் பண்றாரு என்று பாராட்டி வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் போனது என்பது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள மொத்த இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார்.
செந்தில் பாலாஜியும் கோவையில் பூத் கமிட்டி அமைத்து 25,000 பேர் கலந்துகொண்ட பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டி திமுக தலைமையையே மலைக்கச் செய்துள்ளார். கோவை மாவட்ட திமுகவில் நிலவிய உட்கட்சி பூசல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறி கட்சியினருக்கு இடையே இணக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறார். கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் ஸ்கோர் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நிகழ்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, மேடையிலேயே, விவசாயி செயல்பாட்டாளர் 103 வயதான மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது கோவை மக்களை நெகிழச் செய்துள்ளது.
கோவையில் ஆற்றல் என்ற தனியார் அமைப்பின் சார்பில், ஆற்றல் விருது வழங்கும் விழா, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி, நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர், விவசாயி, செவிலியர், துப்புரவு பணியாளர் என பல தொழிலாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் விவசாய செயல்பாட்டாளரான 103 வயது மூதாட்டியான பாப்பம்மாளும் விருது பெற்றார். அமைச்சர் செந்தில் பாலாஜி, மேடையிலேயே மூதாட்டி பாப்பம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர், அவருக்கு விருது வழங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்த வீடியோவைப் பார்த்த திமுகவினரும் நெட்டிசன்களும் கோவையை அமைச்சர் செந்தில் பாலாஜி செம்மையா கவர் பண்றாரு என்று பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.