சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த படி அவர் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (ஜன.22,2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவருக்கு ஜாமின் மறுத்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, இந்த வழக்கில் 2016 முதல் 2017ம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் போலியாக மாற்றப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 29 வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“