டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, குறிப்பிட்ட அந்தக் கடையை சொல்லுங்கள் என கேட்டார். அதற்கு சம்பந்தப்பட்ட செய்தியாளர் அனைத்து கடைகளிலும் இதுபோன்று ரூ.10 வரை அதிகம் வாங்கப்படுகிறது எனப் பதிலளித்தார்.
அதற்கு நீங்கள் 5 ஆயிரம் கடைகளுக்கும் சென்றுள்ளீர்களா? என இது எனப் பதிலளித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வெள்ளிக்கிழமை (மே 26) செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் இருந்து டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவு ஒன்று வந்துள்ளது. அந்த உத்தரவில், “நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுவை விற்கக் கூடாது.
இதையும் மீறி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மதியம் 12 மணிக்கு திறந்து மதுக் கடைகளை இரவு 10 மணிக்கு மூடிவிட வேண்டும்.
தொடர்ந்து, மதுபானங்கள் பற்றிய விலைப் பட்டியலை கடையின் முன்புறத்தில் வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“