Advertisment

இந்தப் பணி முடிந்ததும் மாதாந்திர மின் கட்டணம் அமுல்: சட்ட சபையில் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு

"இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும்." என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

author-image
WebDesk
New Update
Minister Senthil Balaji on TN Assembly about monthly electricity bill and smartmeter fixing  Tamil News

"இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும்." என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று வெள்ளிக்கிழமை சட்டசபை 5-வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. 

Advertisment

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது, மாதாந்திர மின் கட்டணம் எப்போதிலிருந்து கணக்கிடப்படும்? என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்தார்.  

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும். ஏழை மக்கள் நலன் காக்கும் அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மாதம் ஒருமுறை மின்கட்டணம் எடுக்கப்படும் என்ற தி.மு.க-வின் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்று அவர் கூறினார். 

V Senthil Balaji Edappadi K Palaniswami Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment