scorecardresearch

ஸ்டாலின் இல்லாத நேரம்:செந்தில் பாலாஜிக்கு செக்! வீட்டிற்குள் சடசடவென நுழைந்த ஐடி அதிகாரிகள்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்குள் சடசடவென நுழைந்த ஐடி அதிகாரிகள்
வீட்டிற்குள் சடசடவென நுழைந்த ஐடி அதிகாரிகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்துவார்.

அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். ஸ்டாலின் பயணத்திற்கு இடையே தமிழ்நாட்டில் திடீரென ஐடி ரெய்டு சூறாவளி கிளம்பி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வருமான வரித்துறை மூலம் வளைக்கப்பட்டு உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான பிளானுடன் எங்கும் தகவல் கசியாமல் வருமான வரித்துறை இந்த ரெய்டை நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியுடன் நெருக்கமாக பழகும் எல்லோரும் ரெய்டில் சிக்கி உள்ளனர்.சென்னை, கரூர், கோவையில் இந்த ரெய்டு அதிக அளவில்  நடந்து வருகிறது.  கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரர்கள்தான் அதிகமாக ரெய்டில் குறி வைக்கப்பட்டு உள்ளனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்தாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 40 இடங்களில் ரெய்டு என்று தகவல் வெளியானாலும், உண்மையான எண்ணிக்கைப்படி 200க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர்.

இந்த ரெய்டு பெரும்பான்மைக்கும் அடுத்த 3 நாட்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கொங்கு மண்டலங்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை சார்பாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கரூர் வீடு, சென்னையில் உள்ள க்ரீன் வேஸ் வீட்டிலும் இன்று அதிகாலையிலேயே அதிகாரிகள் நுழைந்து, அந்த சாலையை மொத்தமாக மூடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க பரிந்துரைக்குமாறு வலியுறுத்தி மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனையிட சென்ற அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.  சோதனையிட முடியாமல் முற்றுகையிட்டு, கார் தாக்கப்பட்டதன் எதிரொலியாக திரும்பிச் சென்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister senthil balaji raid happened in stalin absence country