விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலஜி ட்வீட் செய்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இருவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். “2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி.” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.