v-senthil-balaji | madras-high-court | அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “செந்தில் பாலாஜியின் மனுவை பிப்.14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தொடர்ந்து, “சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்; கடைநிலை அரசு ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
ஆனால் செந்தில் பாலாஜி 230 நாள்களாக அமைச்சராக நீடிக்கிறார்” என்றார். முன்னதாக கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“