சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் டிச.30ஆம் தேதி திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளது. தினமும் 2,310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேருந்து நிலையத்தில் 4 உணவகங்கள், 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.12 இடங்களில் குடிநீர் வசதியும், 540 கழிவறைகள் அமைப்பும் உள்ளது.
260 கார்கள், 568 பைக்குகள் நிறுத்தும் வகையில் முதல்தளமும், 84 கார்கள், 2230 பைக்குகள் நிறுத்தும் வகையில் 2வது தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து கட்டுமானத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்தவித சிறு தவறும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.
கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தொடங்கப்பட்டதால் சிலருக்கு வயிற்றெரிச்சல். ஆகையால் இந்தப் புகார்கள் வருகின்றன. அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“