Advertisment

காணிக்கை நகைகளை உருக்கும் பணியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - அமைச்சர் சேகர்பாபு

4 ஆயிரம் கிலோ காணிக்கை தங்க நகைகள் உருக்கப்படும் அதனை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Minister Shekhar Babu said that the work of melting the offering jewels in the temples will continue

கோவில்களில் உள்ள காணிக்கை நகைகளை உருக்கும் பணி தொடரும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள லட்சுமி அம்மன் திருக்கோவில் திருப்பணிகளை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குறைந்தப்பட்சம் 4 ஆயிரம் கிலோ தங்கமாவது, திருக்கோவில் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

Advertisment

எத்தனை இடையூறுகள் இருந்தாலும், தடைகள் இருந்தாலும் அவற்றை தகர்த்தெறியும் ஆற்றலும் திறமையும் இந்த ஆட்சிக்கு உண்டு.

இந்தத் தங்க நகைகளை உருக்குகின்ற பணி நடைபெறும். இந்தப் பணம் வங்கியில் வைப்பு நிதியாக சேமிக்கப்பட்டு திருக்கோவில் நிதிக்கு பயன்படுத்தப்படும்” என்றார்.

கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தப் பணிகளை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment